தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வந்து கொண்டிருக்கிறார். என்ன தான் அண்ணன், அப்பா உதவியால் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென தனி பாதை வகுத்து, தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் 'பூமி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'ஜன கன மன' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவிக்கு செப்டம்பர் 10ம் தேதி பிறந்த நாள் வர உள்ளது. இதை சிறப்பாக கொண்டாட வேண்டுமென ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர் இதற்கு முன்னதாக விஜய், அஜித் ரசிகர்களுக்கு தங்கள் மனம் கவர்ந்த நாயகர்களின் பிறந்தநாளை வேற லெவலுக்கு கொண்டாட திட்டமிட்டனர். ஆனால் தல, தளபதி இருவரும் கொரோனா பிரச்சனை  காரணமாக தடபுடலான கொண்டாட்டங்களை தவிருங்கள் என்று போன் மூலம் ரசிகர் மன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

 

இதையும் படிங்க: மொட்டை மாடியில் மூத்த மகனுடன் பஞ்சாயத்து செய்த தனுஷ்... வைரலாகும் போட்டோவிற்கு பின்னால் உள்ள கதை தெரியுமா?

அதே பாணியில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் அன்பிற்கினிய ரசிகர்களே. இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன், உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை சிறப்படையச் செய்கிறது. ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக்கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப்போராடி வெற்றி பெறுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.