90 களில், பல  தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் ஒரு மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் இதுவரை 30 திற்கும், மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான, 'உத்தம வில்லன்' படத்தில் நடித்திருந்தார். மேலும் விரைவில் வெளியாக உள்ள 'பார்ட்டி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் ஹிட் படங்களாக இருந்தாலும், குணச்சித்திர வேடங்கள் மட்டுமே கிடைத்து வருவதால், மலையாளத்தில் ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக இவர் நடிக்க உள்ள படம் ஒன்றிற்காக, தற்போது 20 கிலோ உடல் எடையை குறைத்து, 54 வயதிலும்  இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளார் ஜெயராம்.  மேலும் இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது, வெளியாகி வைரலாகி வருகிறது.