மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மீது ஆகம விதிகளை மீறியதாக கேரள அரசிடம் ஐயப்பன் கோவில் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நடிகர் ஜெயராம் கடந்த சில நாட்களுக்கு முன் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, விரதம் கடைபிடித்து சபரி மலைக்கு சென்றுள்ளார்.

ஜெயராம் சென்ற அன்று... கேரளா தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் தரிசனத்திற்கு சென்றனர், அதில் 50 வயதிற்கு உட்பட்ட இரண்டு பெண்கள் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் நடிகர் ஜெயராம், சபரிமலை கோவிலில் இசைக்கலைஞர்கள்  இசைக்கும் இசைக்கருவியான "இடக்கா" கருவியை வாங்கி இசைத்துள்ளார்.  இது கோவிலின் ஐதீகத்தை மீறிய செயல் என்றும், ஆகம விதிகளை மீறி ஜெயராம் செயல்பட்டதாகவும் சபரிமலை சிறப்பு ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர், அப்போது ஜெயராம் ஆகம விதிகளை மீறியதாக தெரியவந்ததையடுத்து கேரளா அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜெயராம் மீது கேரள அரசு விரைவில் விசாரணை நடத்த போவதாக தெரிகிறது.