சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா கேரியரில் தவிர்க்க முடியாத டாப் 10 படங்களின் பட்டியலை தயாரிக்க வேண்டிருந்தால் அதில் கட்டாயம் “முத்து” திரைப்படம் இடம் பிடிக்கும். 1995ம் ஆண்டு வெளியான “முத்து” படத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு, ரகுவரன் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். “முத்து” திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆன போதும், இன்று பார்த்தால் கூட சலிக்காது. அப்படி திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை கே.எஸ்.ரவிக்குமார் வடிவமைத்திருப்பார். 

இதையும் படிங்க:  “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

இந்தியாவை தாண்டி ஜப்பான் ரசிகர்கள் வரை “முத்து” படத்தை கொண்டாடினர். மொழி தெரியாவிட்டாலும் சப் டைட்டில் மூலமாக இந்த படத்தை கண்டு ரசித்தனர். 175 நாட்கள் தமிழ்த்திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ஜப்பான் திரையங்குகளில் 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி அங்கு 12 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இன்றுவரை ஜப்பானில் வெளியான இந்தியத் திரைப்படங்களிலேயே அதிக வசூலைக் குவித்தது முத்து தான்.

இப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்த படத்தில் சரத்பாபுவிற்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது மலையாள நடிகர் ஜெயராம் தானாம்.  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முதலில் ஜெயராமை தான் அணுகியுள்ளார். அவர் நடிக்க மறுத்ததால் தான் அந்த வாய்ப்பு சரத்பாபுவிற்கு சென்றுள்ளது. ச்சே! இப்படி ஒரு சூப்பர் படத்தை மிஸ் பண்ணிட்டாரே நம்ம ஆளு என மலையாள ரசிகர்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் “முத்து” படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து ஜெயராமே மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: “சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ப்பம் தான்”... உண்மையை போட்டுடைத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை ஹேமா...!

“முத்து” படத்தில் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டாரை கன்னத்தில் அடிப்பது போன்று நடிக்க வேண்டிருந்தது. அதனால் தான் அந்த படத்தில் நடிக்க மறுத்தேன்.  அதுமட்டுமின்றி நான் ரஜினிகாந்தை அடிப்பது போல் நடித்திருந்தால் கட்டாயம் அவரது ரசிகர்கள் என் மீது கோபப்பட்டிருப்பார்கள். எனவே அந்த படவாய்ப்பை மறுத்தேன் என்று கூறியுள்ளார். உங்களுக்கு என்ன மனசு சார், சினிமாவில் கூட ரஜினியை அடிப்பது போல் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே...“யூ ஆர் கிரேட்” என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.