பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தமிழில், கடந்த ஜூன் மாதல் 23 ஆம் தேதி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சி துவங்கி சண்டைக்கும், சச்சரவுக்கும், சற்றும் குறைவில்லாமல் சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.

இதைதொடர்ந்து இந்த மாதம், 21ஆம் தேதி முதல் பிக்பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக பல்வேறு பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியது. எப்படி சில பிரபலங்கள் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்ட போது எப்படி மறுத்தார்களோ அதே போல், தெலுங்கு பிரபலங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததாக எழுந்த தகவலை மறுத்தனர்.

இது ஒருபுறம் இருக்க தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நடிகை ஹெபா பட்டேல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இவர் ஜெய் நடித்த 'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பல தெலுங்கு பங்களில் நடித்துள்ளார். 

இவர் உறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. விரைவில் துவங்க உள்ள தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை, பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக மிகப்பெரிய தொகை இவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.