Asianet News TamilAsianet News Tamil

நடிகர் ஜெய்யின் “ஓட்டுநர் உரிமம் ரத்து”...! அனைவருக்குமே இது ஒரு "பாடம்"..!  

actor jai driving licence cancelled for 6 months
actor jai driving licence cancelled for 6 months
Author
First Published Oct 7, 2017, 4:33 PM IST


நடிகர் ஜெய் “ஓட்டுநர் உரிமம் ரத்து”...!  

கடந்த மாதம் 21 ஆம் தேதி, பார்ட்டி படப்பிடிப்பு  முடிந்ததைக் கொண்டாடும் விதமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு அதிகாலை காரில் சென்ற நடிகர் ஜெய் குடி போதையில் இருந்ததால், அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.  

பின்னர் அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது, போன்ற 4 பிரிவுகளின் கீழ் அடையார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தும் ஏற்படுத்தியது தொடர்பாக நடிகர் ஜெய்க்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.ம
இது குறித்து  விளக்கமளிக்க, கடந்த 5 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாபேட்டை  குற்றவியல் நடுவர்  நீதிமன்றம்  தெரிவித்தது. ஆனால்  ஜெய் நேரில் ஆஜராகததால்,இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இரண்டு நாட்களுக்குள்  ஜெய் கைது செய்ய வேண்டும் என  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை  தொடர்ந்து, பயந்து போன ஜெய் தற்போது, கைது செய்ய வேண்டாம்....நானே வந்து விடுகிறேன் என, சைதாபேட்டை நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜரானார் 
இவரை விசாரித்த நீதிபதி சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார்..

படத்தில் ஹீரோவாக நடிக்கதான் முடியும்.. நிஜ வாழ்கையில்  எல்லோரும் சாதாரண மனிதர்கள் தான் .....உங்களுக்கு வாழ்கையும் திரைப்படமும் ஒன்றா ஜெய்? என கேள்விகளை அடுக்கியுள்ளார் 

இதனால், ஒவ்வொரு கேள்விக்கும் பவ்யமாக  பதில் அளித்து அளித்துள்ளார் ஜெய். 
இந்நிலையில், 6 மாத  காலத்திற்கு ஜெய்யின் ஓட்டுநர் உரிமம்  ரத்து செய்து, சென்னை காவல் துறை ஆணையருக்கு உத்தரவு  பிறப்பித்தது  சைதாபேட்டை  குற்றவியல் நீதிமன்றம். 

மேலும், அபராதமாக ரூ.5,200  ஐ கட்டவேண்டும் எனவும் தீர்ப்பு  வழங்கியுள்ளது. எப்படியோ இழுபறியாக இருந்த இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது  

Follow Us:
Download App:
  • android
  • ios