Asianet News TamilAsianet News Tamil

1 கோடி அறிவித்தும் பயன் இல்லை..! வீடியோ மூலம் விழிப்புணர்வில் இறங்கிய ஜாக்கி ஜான்!

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது, இத்தாலி , ஸ்பெயின், அமெரிக்கா, போன்ற பல்வேறு வளர்ந்த நாடுகளை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
 

actor jackijohn corona awareness video goes viral
Author
Chennai, First Published Apr 4, 2020, 4:05 PM IST

சீனாவில் துவங்கிய கொரோனா:

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது, இத்தாலி , ஸ்பெயின், அமெரிக்கா, போன்ற பல்வேறு வளர்ந்த நாடுகளை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் தனிமை படுத்தி சிகிச்சையளித்து வருகிறார்கள்.

actor jackijohn corona awareness video goes viral

தனிமை படுத்தப்படும் வெளிநாட்டவர்:

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இந்தியா உள்ளே வரும் அனைவரையும், 14 நாட்கள் வீட்டின் உள்ளேயே தனிமையில் இருக்கும் படி, சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் தனிமை படுத்தப்படுபவர்கள் வீட்டில், அது குறித்து நோட்டீஸ் ஒன்றும் ஓட்ட பட்டு வருகிறது.

துரிதமாக நடக்கும் முயற்சி:

கொரோனா வைரஸை கட்டு படுத்த, ஊரடங்கு உத்தரவு போன்ற துரிதமான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையிலும், கொரோனா அதன் கோர முகத்தை காட்டிய வண்ணமே உள்ளது. கொரோனா வைரஸிடம் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற, பல மருத்துவர்கள், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.

actor jackijohn corona awareness video goes viral

விழிப்புணர்வு:

அதே போல் பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரும், முடிந்த வரை மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கூறிவருகிறார்கள். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தாலும், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வர வேண்டியது கட்டாயம் என்றும், அடிக்கடி கை - கால்களை கழுவுவது அவசியம் என்றும் கூறி வருகிறார்கள்.

ஜாக்கி ஜான் வீடியோ:

இந்நிலையில் பிரபல சீன நடிகரான ஜாக்கி ஜான் மிகவும் உருக்கமாக, கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதில் கூறியிருப்பதாவது... " ஹலோ நான் ஜாக் ஜான், இது மிகவும் கடினமான நாட்களாக அனைவர்க்கும் அமைந்துள்ளது.  நாம் அனைவரும் சேர்ந்து கொரோனாவை எதிர்கொண்டுள்ளோம். இந்த சமயத்தில், நீங்கள் வீட்டின் உள்ளேயே உங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும். அரசாங்கத்தை மதிக்க வேண்டும்.  எங்காவது வெளியில் சென்றால் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும். அடிக்கடி கைகளை கழுவுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். பிரகாசமான எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார்.actor jackijohn corona awareness video goes viral

1 கோடி அறிவித்த ஜாக்கி ஜான்:

நடிகர் ஜாக்கி ஜான் ஏற்கனவே, கொரோனா வைரஸ் சீன மக்களை அச்சுறுத்திய போது, இந்த வைரசுக்கு மருந்து கண்டு பிடிப்பவருக்கு, 1 கோடி பரிசு தருவதாக அறிவித்தார். ஆனால் இதுவரை அதிகார பூர்வமாக இந்த ஒரு மருந்தும் கொரோனாவிற்கு கண்டு பிடிக்க முடியாததால், தற்போது வீடியோ மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோ இதோ...

 

Follow Us:
Download App:
  • android
  • ios