actor imman annachi mother pass away

சின்னத்திரையில் 'சொல்லுங்க அண்ணே சொல்லுங்க' மற்றும் 'குட்டீஸ் சுட்டீஸ்' நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. 2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) ஆகிய தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.

மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய தாயார் கமலா, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக இன்று காலை உயிர் இழந்தார்.

இவருடைய இறுதிச் சடங்குகள் இவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நடைபெற உள்ளது.