இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கள பிக்பாஸ்.! அதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மற்றொரு முன்னாள் போட்டியாளர்! ஏ
பிக் பாஸ் சீசன் செவன் நிகழ்ச்சியில், பழைய பிக்பாஸ் போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாண் என்ட்ரி கொடுத்துள்ளார் இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 6 சீசர்களை விட, இந்த சீசனில் டாஸ்க்கள் வித்தியாசமாக இருப்பது மட்டுமின்றி போட்டியாளர்களும் யூகிக்க முடியாத ஸ்டேடர்ஜியுடன் விளையாடி வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ஒரு சிலர் மக்களின் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த பிரதீப் ஆண்டனி, பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்பப்பட்டது, பலரை ஷாக் ஆக்கியது. இந்த விஷயத்தில், தற்போது வரை ரசிகர்கள் பலர் பிரதீப் தான், டைட்டில் வின்னர் என சமூக வலைதளத்தில் இவரை போட்டோவை வெளியிட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ், அடித்து பிடித்து நாமினேட் செய்து வெளியே அனுப்பிய அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகிய இருவர் இந்த வாரம் வீட்டிற்குள் வந்துள்ளனர். அவர்கள் உள்ளே வந்த முதல் நாளே, வெளியே இருந்து கவனித்த விஷயத்தை நோட் செய்து, ஹவுஸ் மேட்ஸ் செய்த விஷயங்களை குத்தி காட்டி முகத்திரையை கிழித்தனர். அதே போல் விஷ பாட்டில், மிக்சர், நரி, சொம்பு,என பட்ட பெயரையும் சூட்டினர்.
இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் மிகவும் அதிருப்தியில் உறைந்தனர். குறிப்பாக பூர்ணிமா தன்னை பற்றி பலரும் பேசும்போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும், தன்னை அட்டாக் செய்வது போல் இருக்கிறது என்றும் இன்றைய ப்ரோமோவில் கண்ணீர் சிந்தினார். இதற்கு மாயா அவரை தேற்றினார்.
Lokesh Kanagaraj: 5 படம் இயக்கிவிட்டேன்.. அதிரடியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்..!
இதைத் தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள நான்காவது புரோமோவில், பிக் பாஸ் வீட்டில் உள்ளே அதிரடியாக நுழைந்துள்ளார் பிரபல நடிகரும், பிக் பாஸ் சீசன் 1 போட்டியில் வைல்ட் கார்டாக கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுகாக உள்ளே வந்துள்ளார். இது குறித்த தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு ரீ என்ட்ரி போட்டியாளர்களால் சோகத்தில் இருந்த ஹவுஸ் மேட்ஸ் ஹரிஷ் கல்யாண் வருகையால் உற்சாகமடைந்துள்ளனர்.