தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமாகி, தற்போது வரை சிறந்த படத்தை கொடுக்க ஒரு சாதாரண நடிகராக போராடி வரும், நடிகர் கெளதம் கார்த்திக், குட்டி பாம்பை கையில் வைத்து விளையாடிய புகைப்படங்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இந்த படத்தில் தான் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதாவின் இளைய மகள் துளசியும் அறிமுகமானார்.

தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கெளதம் கார்த்தி, அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான சில விருதுகளை பெற்றார்.  இந்த படத்தை தொடர்ந்து, ' என்னமோ ஏதோ', 'வை ராஜா வை', 'முத்துராமலிங்கம்' என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினாலும் இதுவரை வெற்றிப்படத்தை கொடுப்பதற்காக போராடி வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அடல்ட் காமெடி படமான ' இருட்டு அறையில் முரட்டு குத்து'  இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், இது போன்ற படங்களில் கெளதம் கார்த்தி நடிக்க வேண்டாம் என்பதே இவருடைய பெண் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. 

தற்போது கெளதம் கார்த்திக்கின் கைவசம் 'தேவராட்டம்' மற்றும் 'மஃட்டி' படத்தின் ரீமேக் ஆகியவை உள்ளது. இந்த  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கெளதம் கார்த்தி, கையில் சிறிய பாம்பு ஒன்றை வைத்து துணிச்சலாக முரட்டு தனமாக விளையாடிய புகைப்படம் இவருடைய ரசிகர்களைம் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது.