actor dileep bail petition rejected

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட சம்பவத்தில் நடிகை பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பல்சர் சுனில் இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்ததை அடுத்து மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10 தேதி, கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே இவரை ஜாமினில் விட கூறி கடந்த ஜூலை 15ம் தேதி அங்கமாலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர் தன்னை ஜாமினில் விட கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி மீண்டும் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். 

கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ள வேளையில், திலீபும் இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் என்கிற ஆசை தற்போது கானல் நீராக மாறியுள்ளது.