கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ். தனக்கென தனி பாணி அமைத்து விதவிதமான கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கி வருகிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களை நடித்து முடித்துள்ள தனுஷ். அடுத்ததாக அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் அத்ராங்கி டே பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.

 

இதையும் படிங்க:  காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!

அதுமட்டுமின்றி கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள D43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படி அடுத்து நடந்து வந்த நல்ல விஷயங்களால் தனுஷும் அவருடைய ரசிகர்களும் செம்ம குஷியில் இருந்து வந்தநிலையில், ஓட்டுமொத்த மகிழ்ச்சியையும் ஒரு மரணம் உலுக்கியுள்ளது. 

 

இதையும் படிங்க: ‘லோ நெக்’ உடையில் படுமோசமாக போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

தனுஷின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் இறந்தது குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், “ஈரோடு மாவட்ட எனது நண்பர்கள் நற்பணி மன்றத்தின் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய திரு.தினேஷ்குமார் உடல்நல குறைவினால் இன்று மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.