நடிகர் தனுஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகம் கடந்து, ஹாலிவுட் திரைப்படங்கள் வரை நடித்து, தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் தனுஷ் நேற்றைய தினம், தன்னுடைய 39 வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது ரசிகர்களின் அன்புக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, 'என் பிறந்தநாளுக்கு எனக்கு வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு எனது அன்பையும், நன்றியையும், வெளிப்படுத்த வார்த்தைகள் அற்று திகைத்துப் போய் நிற்கிறேன். கடந்த 20 வருடங்களாக என் சினிமா பயணத்தில், எனக்கு நம்பிக்கை அரணாக திகழும எனது ரசிகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நட்புறவுகளுக்கு என் நன்றி கலந்த வணக்கம் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஆடி மாசத்துல ஆடி கார் வாங்கி அசத்திய அருண்ராஜா காமராஜ்! குவியும் வாழ்த்து!
மேலும் விரைவில் வெள்ளித்திரைகள் சந்திப்போம் என்றும் இறுதியாக ஓம் நமச்சிவாயா என்றும் அன்புடன் D என தன்னுடைய பெயரின் முதல் எழுத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை வழக்கம் போல் தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ராஷ்மிகாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா... ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகை!
நேற்றைய தினம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் விரைவில் வெளியாக உள்ள, 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இருந்து 3 ஆவது சிங்கிள் பாடல் நேற்று முன்தினமே படக்குழு தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
