சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன்களும், நடிகர் தனுஷின் மகன்களுமான யாத்ரா மற்றும் லிங்கா இருவரும், தலையில் ஹேர் கலர் அடித்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளனர்.

'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது. இதில் பல பிரபலங்கள், அவர்களுடைய குடும்பத்தினர், மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தன்னுடைய பெற்றோர், மனைவி ஐஸ்வர்யா, பிள்ளைகள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் கலந்துக்கொண்டனர். தனுஷ் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்கிற உரிமையையும் தாண்டி இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் கலந்துக்கொண்டார்.

பொதுவாகவே பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கும் போது... ஹேர் கலரிங் எல்லாம் செய்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ரஜினியின் பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தலை முடிக்கு ஹேர் கலரிங் செய்துக்கொண்டு 'காலா' இசைவெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தனர். மேலும் அடையாளமே தெரியாத அளவிற்கு இருவரும் நன்கு வளர்ந்துள்ளனர்.

இதை நீங்களே பாருங்கள்...