"வாங்க மன்மதராசா" என்றழைத்த கருணாநிதி - கலைஞர் 100 விழாவில் நெகிழ்ந்து பேசிய "கேப்டன் மில்லர்"!

Dhanush in Kalaingar 100 : நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியான நிலையில், கலைஞர் 100 விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Actor Dhanush shared his memories with karunanithi in kalaingar 100 function ans

கலைஞர் கருணாநிதி அவர்களுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் சென்னை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள திடலில் இப்பொழுது கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, நடிகர் கருணாஸ், நடிகைகள் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ், கன்னட அமைச்சர் மற்றும் நடிகை ரோஜா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் கருணாநிதி குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் இன்னும் பங்கேற்கவில்லை என்கின்ற தகவலும் வெளியாகி வருகிறது விழா மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தொடர்ச்சியாக கலைஞர் குறித்து பேசி வருகின்றனர். மேலும் நடிகர் தனுஷ் அவர்களும் கலைஞர் குறித்து பேசியுள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை பூர்ணிமா.. உடனே சிம்பு செய்த பேருதவி - வெளியான அசத்தல் அப்டேட் இதோ!

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் தனுஷ் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது பேச்சை துவங்கினார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய திரைப்படங்களை பார்த்து பலமுறை தொலைபேசியில் அழைத்து தன்னை பாராட்டி உள்ளதாக கூறிய நடிகர் தனுஷ் மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடனான தனது முதல் சந்திப்பு நடந்தது குறித்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். 

கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை, முதன் முதலில் ஒரு படத்தின் பூஜையின் போது நான் ஐயா கலைஞர் அவர்களை சந்தித்தேன். அப்போது என்னை "வாங்க மன்மதராசா" என்று கூறி அவர் அழைத்தார், எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கலைஞர் மறைவு பற்றி பேசினால் தான் அவர் மறைந்து விட்டார் என தோன்றுகிறது, அதுவரை அவர் இருப்பதாகத்தான் நினைக்கிறேன், என்று மனம் நெகிழ்ந்து அவர் அந்த விழாவில் பேசியுள்ளார்.

கலைஞர் 100.. மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினி மற்றும் கமல்.. முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்பு - Videos Viral !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios