Rajinikanth in Kalaingar 100 : முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சி தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. "கலைஞர் 100" என்ற அந்த விழா தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகின்றது.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் "கலைஞர் 100" விழாவில் பங்கேற்க அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒருவரின் பின் ஒருவராக விழா மேடைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்த வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Scroll to load tweet…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்துள்ளார். வெள்ளை நிற சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து அவர் உள்ளே வரும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. அதேபோல கருப்பு நிற ஆடையில் விழா மேடைக்கு வந்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

Scroll to load tweet…

அவரை தொடர்ந்து நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரும் கலைஞர் 100 விழா அரங்கை அடைந்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்க அரங்கிற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. உலகநாயகன் கமல்ஹாசன், அமிதாபச்சன், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். 

இன்று இரவு சுமார் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

TRP-ல் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி மடமடவென முன்னேறிய விஜய் டிவி தொடர்கள் - டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ