ஒருவன் இந்த பிரபஞ்சத்துக்கே ராஜாவாக இருந்தாலும் மனைவி என்று வந்துவிட்டால் கூஜா தூக்கியே ஆகவேண்டும் என்கிற உலக நியதியை உடைத்து தன் மனைவி ஐஸ்வர்யாவை செம நக்கல் அடித்துள்ளார் ‘அசுரன்’ தனுஷ்.

சங்கதிக்கு வருமுன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போய்வந்தால்தான் தனுஷின் நக்கல் புரியும். 

கடந்த 2017ம் ஆண்டுஐக்கிய நாடுகள் சபையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடினார். ஐ.நா.சபையில் உலக மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக இந்த நடனம் இடம்பெற்றது. நடராஜர் ஆராதனை என்ற நடனாஞ்சலியில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘அவசரத் தாலாட்டு’என்ற கவிதைக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார். நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக மறைந்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடலுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்.

இது வெறும் செய்தியாகக் கடந்துபோக இருந்த நிலையில் யுடுபில் ஐஸ்வர்யாவின் நடனத்தைப் பார்த்த சிலர் அதிர்ந்துபோய் பகிர்ந்ததும் அந்த நடனத்தைப் பார்த்த பலர் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றதும் இன்றளவும் மறக்க முடியாதது. அங்ஙணம் ஐஸ்வர்யாவால்  பாதிக்கப்பட்டவர்களுல் அவரது கணவர் தனுஷும் ஒருவர் என்பது நேற்றைய அவரது ட்விட்டர் பதிவில் தெரிய வந்துள்ளது.

தனது மனைவி ஐஸ்வர்யா இன்ஸ்டா கணக்கு துவக்கியிருக்கும் செய்தியை ஊர் உலகுக்குச் சொல்ல வந்த தனுஷ்... Dhanush
@dhanushkraja...The wife gets on insta! Wish you some digital fun 🤗🤗 instagram.com/aishwaryaa_r_d… வைஃப் இன்ஸ்டாவுக்கு வந்துட்டாங்க...மக்களே செம கொண்டாட்டம் வெயிட்டிங்...’ என்று செம நக்கல் அடித்திருக்கிறார். அதற்கு அதாவது ஐஸ்வர்யா இனி தன்னோட பரதநாட்டிய வீடியோவெல்லாம் போடுவாங்க...உஷாரா இருங்க’ என்று பொருள் கொள்க..