actor deelip cry for audio launch

மலையாள முன்னனி நடிகர் தீலிப் பற்றி சில காலமாக பல பரபரப்பு தகவல்கள் வந்து கொண்டிருந்தது. முதலில் அவருடைய மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டு, நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள்... நடிகை பாவனா பாலியல் வன்முறைக்கு ஆளாக முக்கிய காரணம் நடிகர் தீலிப் தான் என ஒரு ஆங்கில பத்திரிகை செய்திகள் வெளியிட பின் தொடர்ந்து, பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் மிகவும் வைரலாக பரவியது.

இந்நிலையில் தற்போது அவர் நடித்து வெளியாக தயாராக இருக்கும் ஜார்ஜேட்டன்ஸ் பூரம் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்... 

தான் திரையுலகில் பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி தான் இந்த இடத்தை பிடித்துள்ளதாகவும், இது வரை தன்னை பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளது ஆனால் நான் அதற்கெல்லாம் பெரிதாக வறுத்த பட்டதில்லை.

ஆனால் சமீபத்தில் பாவனாவின் பாலியல் துன்புறுத்தலுக்கு காரணம் என் தூண்டுதல் தான் என செய்திகள் வெளிவந்தது அதை தன்னை கொஞ்சம் கூட சகித்து கொள்ள முடியவில்லை என்றார்.

இந்த விஷயத்தை அறிந்ததும் தானும் அவருக்கு போன் செய்து விசாரித்ததாக கூறினார், மேலும் இதை நான் கடவுள் சத்தியமாக செய்யவும் இல்லை அப்படி ஒரு எண்ணம் தனக்கு வரவும் வராது என்று கண் கலங்கியபடி கூறினார் .