சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சாயலில் உள்ள தனுஷின் மூத்த மகனின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது நடிகர் ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைலும்,  சுறுசுறுப்பும்தான் பல கோடி ரசிகர்களை கட்டி  வைத்திருக்கும் ஈர்ப்பின் ரகசியம் ,  எத்தனை வயதானாலும் அவரின் ஸ்டைலும் வேகமும் இன்னும் அப்படியே இருக்கிறது அதனால்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை வியந்து ரசிக்கும் காரணமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின்  மூத்த மகள் ஐஸ்வர்யா ,  நடிகர் தனுஷை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு  லிங்கா ,  யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர் .  லிங்காவுக்கு 13 வயதும்,  யாத்திரைக்கு 10 வயதும் ஆகிறது.  இந்நிலையில்  ஐஸ்வர்யா தனது மகன்களுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதில் ஐஸ்வர்யாவை விட உயரமாக வந்துள்ளதா மகன் லிங்கா,  அப்படியே அச்சு அசலாக தாத்தா ரஜினிகாந்த சாயலில் உள்ளார் . இதைக்கண்ட நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை  இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

ரஜினி தான் வீட்டில் இருக்கும்போது தனக்கு முழு பொழுதுபோக்கு தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பது தான் என்றும்,  அவர்களே எனக்கு அனைத்துமாக இருக்கிறார்கள் என  தெரிவித்திருந்த நிலையில் ,  அவரின் சாயலில் தனது மூத்த மகளின் மகனும் , தன் மூத்த பேரனும் இருப்பது தெரியவந்துள்ளது .  ரஜினி காந்த் முறையே  தனது பேரப்பிள்ளைகளுக்காக  ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும்  தலா  25 கோடி ரூபாய்  டெபாசிட் செய்துள்ளார் என சமீபத்தில் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது .