புதுக்கோட்டையில்  சாந்தி தியேட்டரில் , நடிகர் தனுஷ் நடத்துள்ள அசுரன் திரைப்படம்  இன்று வெளியிடப்பட்டது, அதில் தனுஷின் உருவ படத்திற்கு அவரது ரசிகர்கள் பீர் ஊற்றி அபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். 

புதுக்கோட்டை சாந்தி தியேட்டரில் இன்று தனுஷின் அசுரன் திரைப்படம் வெளியிடபட்டது,  முதல் காட்சியை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்குக்கு திரண்டுவந்த  ஆட்டம் பாட்டத்துடன்  வெடி வெடித்து கொண்டாடினர்.  இதனிடையே தியேட்டருக்கு ஊர்வலமாக வந்த மற்றொரு குழுவினர்.   தியேட்டர் உள்ளே வைக்கப்பட்டிருந்த தனுஷின் பிளக்ஸ் போர்டுக்கு தங்கள் கையில் கொண்டுவந்திருந்த  பீர்பாட்டிலை  ஊற்றி அபிஷேகம் செய்தனர். அந்த காட்சி அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  முன்னதாக தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நடிகர் தனுஷ், தனக்கு  பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது என்றும்,  தன்னுடைய உருவப் படத்திற்கு பாலாபிஷேகம் செய்ய கூடாது என்றும் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். 

இந் நிலையில் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த அசுரன் பட பிளக்ஸ் போர்டுக்கு ரசிகர்கள் பீர் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர்,  பின்னர் இது குறித்து பீராபிஷேகம் செய்த  ரசிகர்களிடம்  கேட்டபோது, தனுஷ் தனக்கு பேனர் வைக்கக்கூடாது, அதற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யக்கூடாது என்று கூறியதால், இப்போது அவருக்கு  நாங்கள் பீர் ஊற்றி அபிஷேகம் செய்கிறோம்  என்று அதிரடியாக கூறி பொறிக்கிளப்பினர். தனுஷ் ரசிகர்கள் தியேட்டரில் போட்ட ஆட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.