சேவையே கடவுள்... இளைஞர் சிவசக்திக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி... குவியும் பாராட்டு!
தான் உனக்குச் செய்தது போன்ற உதவியை பிறருக்கும் செய்ய வேண்டும் என்று சிவசக்தியிடம் அட்வைஸ் செய்திருக்கிறார் லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் ட்விட்டர் வெளியிட்ட இந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவகச்தி என்ற இளைஞரைப் பற்றி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்ங்களில் வைரலாகி வருகிறது. அவரது சமூக அக்கறைக்கு பலரும் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
ராகவா லாரன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில் பேசும் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
“புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவசக்திக்கு 4 வயதாக இருந்தபோது, அவரது தாய் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். அவரது தந்தை குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார். சிவசக்தியையும் அவரது சகோதரியையும் தாயே கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் இருவரும் என் வீட்டில் வளர்ந்தார்கள்.
அரச குடும்பத்தில் மருமகனாகப் போகும் சித்தார்த்! அதிதியுடன் காதல் மலர்ந்த கதை இதுதான்!
சிவசக்தி தற்போது கணிதத்தில் B.Sc முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். காவல் உதவி ஆய்வாளர் ஆக வேண்டும் என்ற தன் கனவை நோக்கி அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார். தன்னைப் போன்ற பலருக்கு பேருக்கு உதவவும் அவர் விரும்புகிறார். கல்விதான் சக்தி வாய்ந்த ஆயுதம். வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது.”
இவ்வாறு லாரன்ஸ் கூறியிருக்கிறார். சமூக சேவைதான் கடவுள் என்ற பொருள்படும் #ServiceIsGod என்ற ஹேஷ்டேக் ஒன்றையும் தனது பதிவில் பயன்படுத்தியிருக்கிறார்.
தான் உனக்குச் செய்தது போன்ற உதவியை பிறருக்கும் செய்ய வேண்டும் என்று சிவசக்தியிடம் அட்வைஸ் செய்திருக்கிறார் லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் ட்விட்டர் வெளியிட்ட இந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. லாரன்ஸ் செயலுக்கு சமூக வலைத்தள பயனர்கள் எக்கச்செக்கமான பாராட்டுகளைக் கூறி வருகின்றனர்.
வருமான வரித்துறை ரூ.6,329 கோடி தரணும்! ஆர்டர்களைக் காட்டும் இன்போசிஸ் நிறுவனம்!