அரச குடும்பத்தில் மருமகனாகப் போகும் சித்தார்த்! அதிதியுடன் காதல் மலர்ந்த கதை இதுதான்!
தெலுங்கானாவில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி கோயில் ஒன்றில்தான் அதிதி - சித்தார்த் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த கோயில் அதிதி குடும்பத்திற்குப் பிரியமான கோயிலாம். அந்த ஊரில் சிற்றரசராக இருந்த அதிதியின் கொள்ளு தாத்தாதான் கட்டினாராம்.
சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. அவர்கள் சில படங்களை வெளியிட்டு இதை சமூக வலைதளங்களில் அறிவித்தனர். ஆனால் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் தான் செய்து கொண்டதாக அப்டேட் கொடுத்தனர்.
கும்பகோணத்தில் பிறந்த தமிழரான சித்தார்த் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். பாய்ஸ் படத்திற்கு ஆடிசன் நடந்தபோது எழுத்தாளர் சுஜாதா இயக்குநர் ஷங்கரிடம் முன்னா கேரக்டருக்கு சித்தார்த் பொருத்தமாக இருப்பார் என்று பரிந்துரை செய்தார்.
அப்போது சித்தார்த் மணிரத்னம் யூனிட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஷங்கர் நேரில் சென்று பார்த்தபோது சுறுசுறுப்பாக இருந்த சித்தார்த்தைப் பார்த்த உடனே பிடித்துவிட்டதாம். பாய்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்தது பல தெலுங்கு பட வாய்ப்புகளை அவருக்குக் கொடுத்தது.
தெலுங்கு சினிமா அவரை சீக்கிரமே கைவிட்டது. அடுத்து தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிய வெற்றிப் படங்கள் ஏதும் அமையவில்லை. தெலுங்கில் சுருதிஹாசனுடன் நடித்த மகாசமுத்திரம் ஹிட் ஆனது. அப்போது சுருதியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சிறிது காலம் இணைந்து வாழ்ந்தனர் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த உறவு நீடிக்கவில்லை.
பிறகு சமந்தாவுடன் நடித்த சித்தார்த் அவருடன் காதலில் விழுந்தார். மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமந்தாவையும் பிரிய நேரிட்டது. இதனிடையே மேக்னா என்ற ரகசியமாகத் திருமணம் செய்திருந்து, விவகாரத்தும் பெற்றிருந்தாராம் சித்தார்த். இந்த நிலையில் தான் அதிதி ராவுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி கோயில் ஒன்றில்தான் அதிதி - சித்தார்த் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த கோயில் அதிதி குடும்பத்திற்குப் பிரியமான கோயிலாம். அந்த ஊரில் சிற்றரசராக இருந்த அதிதியின் கொள்ளு தாத்தாதான் கட்டினாராம். அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்க மறுத்த தெலுங்கு தேசம்தான் அவரை மருமகனாக வரவேற்கம்ப் போகிறது.