தமிழகத்தில் கொரோனா அச்சத்தையும் மீறி மக்களை தியேட்டருக்கு வரவழிக்கும் என்ற நம்பிக்கையில் மாஸ்டர் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சத்யா படம் மூலமாக ஏற்கனவே இணைந்த இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி - நடிகர் சிபிராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் கபடதாரி. கன்னடத்தில் 2019ம் ஆண்டு காவலுதாரி என்ற பெயரில் வெளியான கன்னட படத்தின் ரீமேக் தான் இது. ஜெயப்பிரகாஷ், நாசர், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார், சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

கன்னடத்தில் வில்லனாக நடித்த சம்பத் மைத்ரேயாவே இதிலும் நடித்துள்ளார். டிராபிக் எஸ்.ஐ. ஆன சிபிராஜ் 40 வருடங்களுக்கு முன்பு புதைத்து போன 3 பேர் மர்ம மரணம் குறித்த வழக்கை தூசி தட்டி விசாரிக்கிறார். அதில் மர்ம விலகியதா? என்பது தான் கதை. தியேட்டர்களில் இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. முதல் நாளில் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் நேற்று நள்ளிரவு முதலே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது சிபி ராஜ் படத்திற்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இதையும் படிங்க: இறுக்கி அணைத்த படி இரண்டாவது காதலருடன் ஸ்ருதி ஹாசன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்...!
தமிழகத்தில் கொரோனா அச்சத்தையும் மீறி மக்களை தியேட்டருக்கு வரவழிக்கும் என்ற நம்பிக்கையில் மாஸ்டர் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மாஸ்டர் படத்திற்கு வசூல், விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பை அடுத்து தியேட்டர்களில் கூட்டம் களைகட்டியது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியானதால், அந்த தியேட்டர்களில் கபடதாரி படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வரும் இந்த சமயத்தில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட உள்ளதால் படக்குழு மிக்க மகிழ்ச்சியில் உள்ளதாம்.
