Cobra FDFS : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம் நடிப்பில் 4 ஆண்டு இடைவெளிக்கு பின் தியேட்டரில் ரிலீசாகும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம் 7 விதமான கெட் அப்களில் நடித்து மாஸ் காட்டி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இதுதவிர நடிகைகள் மிருணாளினி, மீனாட்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்கில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இதன் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. 

இதையும் படியுங்கள்... ஆர்யாவின் கேப்டனிலிருந்து வெளியான புதிய தகவல்..என்ன விஷயம் தெரியுமா?

அதிகாலையிலேயே திரையரங்கு முன் குவிந்த ரசிகர்கள் நடிகர் விக்ரமின் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி திரையரங்க வாசலில் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். கோப்ரா படத்தின் முதல் காட்சியை காண படக்குழுவும் அதிகாலையிலேயே திரையரங்குக்கு வந்திருந்தது.

Scroll to load tweet…

குறிப்பாக படத்தின் நாயகன் விக்ரம் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென ஆட்டோவில் வந்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், கோப்ரா பட நாயகிகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, மீனாட்சி மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோரும் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... தளபதி விஜயின் 'வாரிசு' படத்தின் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..! வைரலாகும் புகைப்படம்..!