தளபதி விஜயின் 'வாரிசு' படத்தின் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..! வைரலாகும் புகைப்படம்..!
இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும்... 'வாரிசு' படத்தில் தற்போது பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும், 'வாரிசு' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் இணைந்துள்ள பிக்பாஸ் பிரபலம் குறித்த தகவலும் தற்போதுவெளியாகியுள்ளது.
Nandini Rai
ஆனால் இவர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலம் இல்லை. பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நந்தினி ராய் தான், தற்போது 'வாரிசு' படத்தில் இணைந்துள்ளாராம். மிக முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருவதாகவும், இவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: டைட் உடையில் ஹெவி ஒர்க் அவுட்..! உடலை வில்லாக வளைத்து சூடேற்றும் ரித்திகா சிங்..! ஹாட் போட்டோஸ்..
வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய உருவாகும் இந்த படத்தை, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார், விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு முதல் முறையாக தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
varisu
மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் 'வாரிசு' படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவின் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன் 1' ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது..! படக்குழு வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!