பிரபல நடிகர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகனும், பிரபல கன்னட நடிகருமான 'சிரஞ்சீவி சர்ஜா திடீர் என ஏற்பட்ட மூச்சி திணறல் காரணமாக மரணமடைந்துள்ளது திரையுலகினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

39 வயதே ஆகும் சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2018 ஆண்டு தான், பிரபல நடிகை மோகனா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திடீர் என மூச்சி திணறலால் அவதி பட்ட இவரை, உடனடியாக பெங்களுருவில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் இவருடைய குடும்பத்தினர் அனுமதித்தனர். ஐசியு - வில் அனுமதிக்காட்ட இவருக்கு, தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் தற்போது நடிகர் அர்ஜுன் குடும்பம் மற்றும் இன்றி, பிரபலங்கள் பலரும் இடிந்து போய் உள்ளனர்.