‘பிகில்’படம் குறித்து முகநூல், ட்விட்டர் வலைதளங்களில் வரும் நக்கலான விமர்சனங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார் நடிகர் பாக்யராஜின் மகனும் விஜயின் தீவிர ரசிகருமான சாந்தனு. இவர் ‘தளபதி 64’ படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான ‘பிகில்’,’கைதி’படங்களில் முந்தைய படம் கடுமையான நக்கல்களை சந்தித்து வருகிறது. வலைதளங்களில் இப்படத்தை விஜய் ரசிகர்கள் அல்லாதவர்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதில் அளித்து வந்த சாந்தனு ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரமடைந்துஅப்படி குரைக்கிறவங்கள்லாம் நேரா என் வீட்டுக்கு வந்து குரைங்க’என்று கடுமையாகப் பதிவிட்டார்.

இது தொடர்பான அவரது முதல் பதிவில்,... "விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துகள். பெரிய ஸ்டார் நடிகர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார். ராயப்பன் கதாபாத்திரத்தில் என்னவொரு நடிப்பு. ஒரே மாதிரியாக இருக்கிறார், நடிக்கிறார் என்று கிண்டல் செய்தவர்களுக்கு 'பிகில்' தான் பதில். பெண்களின் மதிப்பை உயர்த்துவதில் புத்திசாலி இயக்குநர் அட்லி" என்று தெரிவித்தார். அவரது அப்பதிவும் கடும் கிண்டலுக்கு ஆளானது.

இதனைத் தொடர்ந்து சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "டேய் நேரத்தை வீண் செய்யாதீங்க. சமூகவலைத்தள வசையும் சண்டையும் நேர விரயம். உங்கள் லட்சிய ஹீரோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவங்க பெயரைக் கெடுக்காதீங்க. போதும்! நீங்கள் யார் மீது குறிவைத்தாலும் அவர் உங்களைப் புறக்கணிக்கவே போகிறார். எனவே தயவு செய்து நேர விரயம் செய்யாதீர்கள். இது அனைவருக்கும் தான். கேக்கறவங்க கேளுங்க, கேக்காதவங்கள சொல்லிப் பிரயோசனம் இல்ல.யாருடைய படமாக இருந்தாலும் சரி, நான் அதன் தவறைச் சுட்டிக்காட்டுவேன். நீங்கள் பதுங்கியிருந்தால் அது என் தவறல்ல. ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, மாலை வேளையின் உங்கள் பொழுதுபோக்காக மாற நான் விரும்பவில்லை. அதையும் தாண்டி நான் தவறு என்று நீங்கள் நினைத்தால் சோஷியல் மீடியா பின்னால் குரைப்பதை விட உங்களை நான் என் வீட்டுக்கு வரவேற்கிறேன்” என்று தனது ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார் சாந்தனு.