சாம்பார் வைப்பதற்காக தனது வீட்டின் பின்புறமுள்ள முருங்கை மரத்தில் ஏறி முருங்கைக்காய் பறித்த  நடிகை பிந்து மாதவி, அதைப் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் பிந்து மாதவி. பின்னர் படவாய்ப்புகள் குறைந்ததால், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், பட வாய்ப்புகள் வந்தாலும், பெரிதாக எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் நடிகை , பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சாம்பார் வைப்பதற்காக தனது வீட்டின் பின்புறமுள்ள முருங்கை மரத்தில் ஏறி நடிகை பிந்து மாதவி முருங்கைக்காய் பறித்துள்ளார். அதைப் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.