Actor Bhavana weds Kannada producer Naveen
நடிகை பாவனாவிற்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் இன்று காலை திருச்சூரில் திருமணம் நடைபெற்றது.
சிறந்த துணை நடிகை
பாவனா முதலில் மலையாளத்தில் "நம்மல்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக, ஏசியாநெட் ஃபிலிம் அவார்ட்ஸ் சார்பாக சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைக்கப்பெற்றது.

தமிழில் அறிமுகம்
அதன் பிறகு தமிழில் "சித்திரம் பேசுதடி" படம் அறிமுகமானார் பாவனா.தொடர்ந்து "ஜெயம்கொண்டான்", "தீபாவளி", "அசல்" உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து வந்தார்.
பாலியல் வன்கொடுமை
இவர்கள் இருவரும் திருமணத்தை எண்ணி கனவு கண்டு கொண்டிருக்கும் போது அந்த துயர் சம்பவம் நடந்தது. பிப்ரவரி 17 ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பி கொண்டிருந்த பாவனாவை ஒரு கும்பல் கடத்தியது. அதன்பின்னர், அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வீடியோ எடுத்தது.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, பாவனாவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திலீப்
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான திலீப் இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.பழி வாங்கும் நோக்கில் சக நடிகையை, ஒரு முன்னணி நடிகர் அதுவும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நடிகர் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்தது சக நடிக, நடிகைகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் திலிப் மீது இருந்த மரியாதையை குறைத்தது.

