"பேஸ்புக்" கணக்கில் கூட இல்லாத பிக் பாஸ் பரணி...! ஏன் என்ற கேள்விக்கு கிடைத்த ருசிகர தகவல்..!

நாடோடிகள் படம் மூலமும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் மக்கள் மனதில் வந்து நின்றவர் நடிகர் பரணி...

இயல்பான பேச்சு, இயல்பான நடிப்பு, அனைவரையும் மதிக்கும் தன்மை, யாராக இருந்தாலும் அவர்களை மதித்து பொறுமையாக பதில் சொல்லும் சுபாவம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் இவருடைய புகழை.....

அதுமட்டும் இல்லைங்க..... பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு சில நாட்கள்  மட்டுமே இருந்தாலும் கூட அவருடைய குணநலன்கள்  அனைவரையும் கவர்ந்தது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, நடிகர் பரணி எந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலும் அங்கு அவர் நடந்துக்கொள்ளும் விதம் அனைவரையும் வெகுவாக ஈர்க்கிறது.

ரசிகர்கள் ஆசை ஆசையாய் அவருடன் புகைப்படம் எடுக்க வரும் போது, அவர்களுடன் பொறுமையாக இருந்து புகைப்படம் எடுப்பது முதல் அவர்களை தன் நண்பர்கள் போல் அரவணைத்து கொள்கிறார்  நடிகர் பரணி

இந்நிலையில், அவருடைய ரசிகர் ஒருவர் நடிகர் பரணியை பேஸ்புக்கில் தேடி உள்ளார். அப்போது நடிகர் பரணிக்கு பேஸ்புக் பக்கங்கள் அதிகமாக இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளததாக  தெரிவித்ததை அடுத்து....இது குறித்து  நடிகர் பரணியிடம், நமது ஏசியாநெட் நிருபர்  கேட்ட போது தான் தெரிய வந்தது அவர் பேஸ்புக்கில் கணக்கே வைத்துக்கொள்ள வில்லை என்று...

அப்போது பேசிய பரணி, "ஆமாம்..எனக்கு பேஸ்புக் கணக்கு  கிடையாது....ஆனால் நான் ட்விட்டரில் உள்ளேன்...என் மனதை பாதிக்கக்கூடிய அல்லது என் மனதில் பட்ட நாலு நல்ல கருத்துகளை பகிர்ந்துகொள்ள மட்டும் தான் ட்விட்டர் கணக்கு வைத்து உள்ளேன்.....

அதுமட்டுமில்லாம, பேஸ்புக்ல நான் இருந்தால் கூட இந்த அளவிற்கு ஆக்டிவாக பயன்படுத்தி இருப்பேனா என்று தெரியாது...ஆனால் என்னுடைய ரசிக பெருமக்கள் என்னுடைய பெயரில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி மிக சிறப்பாக செயல்பட்டு  வருகின்றனர்..இதை பார்க்கும் போது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

இதன் மூலம் நடிகர் பரணி தங்கள் ரசிகர்கள் மனதில் மேலும் ஒருபடி உயர்ந்து நிற்கிறார் என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.