கொரோனா தொற்றால், தமிழ் சினிமாவில் காமெடியனாகும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமான பாலசரவணனின் தந்தை உயிரிழந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றால், தமிழ் சினிமாவில் காமெடியனாகும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமான பாலசரவணனின் தந்தை உயிரிழந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: நடிகர் நிதீஷ் வீரா மறைவால் கீர்த்தி சுரேஷ் படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்..!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதையும் கொரோனா வைரஸ், ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே சென்றாலும், தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கின் காரணமாக சற்று குறைய துவங்கியுள்ளது. 

தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தடுப்பூசி போட்டு கொண்டாலுமே, முடிந்தவரை அவசியம் இல்லாத போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என மருத்துவர்களும், சுகாதார துறையும் தொடர்ந்து அறிவுறுத்து வருகிறது.

மேலும் செய்திகள்: ஜொலிக்கும் உடை... பிளாக் ஹாட் பட்டர் ஃபிளை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

அப்படியே வெளியே சென்றால், டபிள் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகள், மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் எதிர்பாராத சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

மேலும் செய்திகள்: 7 தேசிய விருதுகள் பெற்ற பிரபல இயக்குனர் காலமானார்..!

அந்த வகையில், பிரபல இளம் காமெடி நடிகர்களில் ஒருவரான பால சரவணனின், தந்தை... எஸ்.ஏ.ரங்கநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த மாதம் தான், நடிகர் பாலசரவணனின் சகோதரியின் கணவர், 32 வதிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியிருந்தார். தங்கை கணவர் இறந்து ஒரு மாதமே ஆன நிலையில் அவரது பாலசரவணனின் தந்தையும் தற்போது கொரோனாவால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.