Actor Balakrishna Again slaps fan
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது ரசிகர் ஒருவரை பொது இடத்தில் வைத்து அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதுபோல் ஏற்கனவே ரசிகர் ஒருவரை அடித்தும், படப்பிடிப்பில் தனது ஷீ கயிற்றை சரியாகக் கட்டாத உதவியாளரை அடித்தும் பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கு நடிகர் பாலகிருஷ்ணா(வயது57), ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராவர். அனந்தபுர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்காக ஊர் ஊராக, வீடுவீடாக பிரசாரத்தில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணா ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில், பிராசரத்தின் போது, ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க தீவிரமாக முயற்சி செய்தார். அப்போது பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்கும்முயற்சியில் அவர் மீது மோதியுள்ளார்.

இதனால், வெறுப்படைந்த பாலகிருஷ்ணா அந்த ரசிகரின் கன்னத்தில் அடித்தார். இதை படம்பிடித்துக்கொண்டு இருந்த ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இப்போது இந்த காட்சி வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நந்தியால் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக பாலகிருஷ்ணா சென்ற போது, செல்பி எடுக்க ஒரு ரசிகர் முயற்சித்தபோது, ஆத்திரத்தில் அந்த ரசிகர் கன்னத்தில் அறைந்தார் இந்த சம்பவத்தையும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் தீவிரமாகப் பரவியது.
ஜெய் சிம்ஹா திரைப்பட படப்படிப்பின்போது, தனது ஷீ கயிற்றை சரியாகக் கட்டாத உதவியாளரை பாலகிருஷ்ணா அடித்து சர்ச்சைக்குள்ளார்.
கடந்த 2004ம்ஆண்டு, திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். அந்த விசாரணையின் முடிவில் தன்னை தற்காக்கவே சுட்டேன் என்று பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணையில் அந்த தயாரிப்பாளர் பல்டி அடித்து, பாலகிருஷ்ணா தன்னைச் சுடவில்லை எனத் தெரிவித்ததையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
