என் குடும்பத்தை பாழாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மற்றும் நித்யாவால் எனது மகள் உயிருக்கு ஆபத்து உள்ளது என நடிகர் பாலாஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருபவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த பாலாஜி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில் நடிகர் பாலாஜிக்கும் மனைவி நித்யாவுக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி நித்தியாவுடன் எனக்கு காதல் திருமணம் நடைப்பெற்றது. எங்களுக்கு போஷிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது. நித்யா உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்ற இடத்தில் ஜிம் ஆலோசகர் பைசில் உடன் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு தீர்வுகாண காவல்துறை உதவியை நாடியுள்ளார்.

 

அப்போதுதான் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜ்குமாரின் தொடர்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட மனோஜ்குமார் நித்யாவிடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் மனோஜ்குமார் என்று தாடி பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மனோஜ்குமார் மற்றும் நித்யாவால் என் மகள் போஷிக்காவின் உயிருக்கு ஆபத்து உள்ளது. போஷிக்காவை போர்டிங் பள்ளியில் சேர்த்தால் மட்டுமே அவர் நலமுடன் இருப்பார், மேலும் அதுவே அனைத்திற்கும் தீர்வாகவும் அமையும் என்று அவர் தெரிவித்தார்.