actor bakyaraj announced again join in admk party

அதிமுகவில் இணையப்போகிறேன் என இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் தடாலடியாக அறிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவை தலைமை தாங்கிய சசிகலா சிறைக்கு சென்று விட அதன்பிறகு தினகரன் துணைப் பொதுச் செயலர் என கூறிக்கொண்டு தலைமை தாங்க முற்பட்டார். இந்நிலையில், பிரிந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்று சேர்ந்தனர். ஆனால் தினகரன் தலைமையையோ அல்லது சசிகலா குடும்ப அரசியலையோ ஏற்காத அதிமுகவினர், தினகரனை கழற்றி விட்டனர். இதனால் தினகரன் தனியாக செயல்பட அதிமுக., கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கிய நடிகர் கமல் அரசியல் குறித்து அவ்வப்போது சூசகமான கருத்துகளை தெரிவித்து வருகிறார். 

நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று நினைத்துக் கொண்டிருந்த ரஜினி, ஒரு வழியாக அரசியலுக்கு வருவதாக அறிவித்து, ஏதோ முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறார்.


மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எடுத்த வீடியோவை, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஆர்.கே.நகர் வாக்குப் பதிவுக்கு முன்னர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

இப்படி தமிழக அரசியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் அரசியலுக்கு வருவேன் என அதிரடியாக அறிவித்தார். 


தனியார் இணைய தளத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், அரசியலில் இறங்கினால் அதிமுகவில் சேருவேன் என்றும் எம். ஜி. ஆர் தொடங்கிய கட்சி தற்போது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. எனவே அவரின் பக்தனாக கட்சியை வீழ்ச்சியடையாமல், என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்..