நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆசிப் பஸ்ரா. 1998ம் ஆண்டு வோஹ் என்ற படத்தின் மூலமாக இந்தி திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா. அதன் பின்னர் பிளாக் ஃபிரைடே, அவுட் சோர்ஸ்ட், ஜப் வீ மெட், கை போ சே, கிரிஷ் 3, ஏக் வில்லன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் கூட மும்பையை மையமாக கொண்டு லிங்கு சாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட்லி கோலியின் மனைவியும், பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா தரப்பில் வெளியான “பாதாள் லோக்” என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் ஆசிப் பஸ்ரா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஆசில் பஸ்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவருடைய சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசீப் பஸ்ராவின் மரணத்திற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.