குரங்கு ஒன்று குழந்தையை கடத்தி செல்ல, பொம்மை சைக்கிளில் வந்து தரதரவென இழுத்து செல்லும்  வீடியோவை  வெளியிட்டு மனம் பொறுக்காமல், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் வைரஸ் என பொங்கி எழுந்துள்ளார் நடிகர் அஸ்வின் கக்குமான்னு.

'நடுநிசி நாய்கள்' படத்தின் மூலம் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின். இந்த படத்தை தொடர்ந்து, அஜித்துடன் மங்காத்தா, சூர்யா நடித்த '7 ஆம் அறிவு' ஆகிய படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

'மேகா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஸ்வினுக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். 

தற்போது இவர் நடிப்பில் தொல்லை காட்சி, நீர்திரை , இது வேதாளம் சொல்லும் கதை, ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. 

மேலும் செய்திகள்: ஊரடங்கு நேரத்தில்... நடிகை ரோஜாவின் பாதங்களுக்கு பூ போட்டு வரவேற்பு! நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!
 

மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கோரோனோ வைரஸ் ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோ அதை விட பயங்கரமாக உள்ளது.

இந்த வீடியோவில், ஒரு சிறிய சைக்கிளை ஓட்டி வரும் குரங்கு, கண் இமைக்கும் நேரத்தில், குழந்தை ஒன்றை தரதரவென இழுத்து செல்கிறது. பின் அங்கிருந்த ஒருவர் சத்தமிட அந்த குரங்கு குழந்தையை விட்டு விட்டு அங்கிருந்து செல்கிறது. 

மேலும் செய்திகள்: சிக்னல் கொடுத்தேனா? தவறாக நடக்க முயன்ற காமெடி நடிகரை கேரவனுக்கு அழைத்து சென்று தலை குனிய வைத்த பிரகதி!
 

இது குறித்து அஸ்வின் கூறுகையில் .... ஒரு குரங்கிற்கு சைக்கிள் ஓட்ட  பயிற்சி கொடுத்து அதை கயிற்றில் கட்டி குழந்தையை கடத்த வைக்கிறார்கள். என்ன விதமான மனிதர்கள் இவர்கள்? நிஜத்தில் மனிதர்கள் தான் உண்மையான வைரஸ் என அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ: