அஜித் நடித்த 'பில்லா 2 ' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் அசோக்செல்வன்.  இந்த படத்தை தொடர்ந்து சூதுகவ்வும், பீசா 2 ,  தெகிடி, ஆரஞ்சுமிட்டாய், என தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்ததால், இனி கதைகள் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்ற தீர்மானத்தோடு இருப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.  இதனால் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை.

ஆனால் கடந்த ஆண்டிற்கும்  சேர்த்து, இந்த வருடம் இவர் நடிப்பில் தொடர்ந்து 4 படங்களுக்கு மிகாமல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், காதலர் தினத்தன்று அசோக் செல்வன் நடிகை ரித்திகா சிங்குடன் இணைந்து நடித்துள்ள 'ஓ மை கடவுளே' திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் சென்யோரீட்டை,  நெஞ்சமெல்லாம் காதல், வேழம், ரெட் ரன், மரைக்கார், போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இதை தொடர்ந்து, தெலுங்கு படத்திலும் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஐ.வி.சசியின் மகன், அணி சசி இயக்க உள்ளார்.  இந்த படத்திற்காக அசோக் செல்வன் தன்னுடைய எடையை 100 கிலோவாக அதிகரிக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியுள்ளார்.

ஏற்கனவே 20 கிலோ எடையை கூட்டியுள்ள இவர் இன்னும் 80 கிலோ ஏற்றுவதற்காக படாதபாடுபட்டு வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனன் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் நாயகியாக நடிக்கவுள்ளனர். இப்படத்தில் சமையல் கலைஞராக அசோக் செல்வன் நடிக்க உள்ளதாகவும்,  படப்பிடிப்பு விரைவில் லண்டனில் துவங்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகைறது.