பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுமீத் சைகலின் மகள் சாயிஷா, தெலுங்கு சினிமாவில் “அகில்“ என்ற படம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக “வனமகன்” படம் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் கார்த்தி உடன் “கடைக்குட்டி சிங்கம்”, விஜய் சேதுபதி உடன் “ஜுங்கா” போன்ற படங்களில் நடித்தார். அந்த வரிசையில் ஆர்யாவுக்கு ஜோடியாக “கஜினிகாந்த்” படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

திருமணத்திற்கு பிறகு குடும்பம், கணவர், குழந்தைகள் என்று செட்டில் ஆவார் என நினைத்தால், முன்பை விட இப்போது தான் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். காரணம் திருமணத்திற்கு பிறகும் அம்மணி தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவது தான். தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் “யுவரத்னா” என்ற படத்தில் நடித்து வரும் சாயிஷா, கணவர் ஆர்யாவுடன் “டெடி” படத்திலும் நடித்துள்ளார். 

இதையும் படிங்க:  அமலா பால் முன்னாள் கணவரின் அழகிய குழந்தை... முதன் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய்...!

தற்போது லாக்டவுனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டு வேலை செய்வது, உடற் பயிற்சி செய்வது, நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக மார்டன் உடையில் சாயிஷா ஆடிய கவர்ச்சி நடன வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. இந்நிலையில் நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

மே முதல் வாரத்தில் சாயிஷா கறுப்பு நிற கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன லாக்டவுனில் அதிகமாக சாப்பிட்டதால் குண்டாகிவிட்டீர்களா? என நக்கலடித்தனர். அதன் பின்னர் இரண்டாவது வாரம் வெளியான வீடியோவில் சுடிதாரில் தரிசனம் கொடுத்த சாயிஷா, லேசான டான்ஸ் ஸ்டெப்சை மட்டுமே பகிர்ந்திருந்தார். அதில் பார்க்க சாயிஷா இன்னும் குண்டானது போல் தெரிந்தது, அதற்கு காரணம் சாயிஷா கர்ப்பமாக இருப்பது தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுபற்றி சாயிஷா, ஆர்யா வாய் திறந்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்.