கடந்த ஓரிரு மாதங்களாக சின்னத்திரையில் அனைவரையும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தது "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி''.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 16 பெண்களில் எந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்வார் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். எஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். இறுதிவரை வந்த மூன்று பெண்களில் கூட ஆர்யா எந்த பெண்ணையும் தேர்வு செய்யவில்லை.

என்னினும் தனக்கு சில நாட்கள் யோசிக்க நேரம் வேண்டும், விரைவில் தான் எந்த பெண்ணை திருமணம் செய்வேன் என கூறுவதாக தெரிவித்த ஆர்யா, இது குறித்து பேச்சை எடுத்தாலே எஸ்கேப் ஆகிடுகிறார். இவரிடம் பேட்டி வேண்டும் என்கிற நோக்கத்தில் யாராவது பேசினால் கூட உடனடியாக நோ சொல்லி தவிர்த்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மூன்று பெண்களை மட்டும் இல்லை தன்னையும் ஆர்யா ஏமாற்றி விட்டார் என கூறியுள்ளார். கலர்ஸ் தொலைகாட்சியில், சிவகாமி சீரியலில் நடித்து வரும் நாயகி மீனு கார்த்திகா.

 

இது குறித்து அவர் கூறுகையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் சுசானா. கண்டிப்பாக ஆர்யா சுசானாவை தான் திருமணம் செய்துக்கொள்வார் என நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் ஆர்யாவின் முடிவு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலம் ஆர்யா அவர்களை மட்டும் இல்லை தன்னையும் ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளர்.