விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்தே தீரும் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகர் அருண் விஜய். தல அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படம் மூலம் மறு அவதாரம் எடுத்த அருண் விஜய், அதன் பின்னர் தொட்டது எல்லாமே ஹிட்டு தான். தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூடர் கூடம் இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள், பிரபாஸ் உடன் சாஹோ, புதுமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் பாக்ஸர், மாஃபியா என அடுத்தடுத்து புதுப்புது கெட்டப்புகளில் கலக்க உள்ளார். 

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டுவதற்காக உடல் எடை மற்றும் ஹேர் ஸ்டைலில் வெரைட்டி கொடுத்துள்ளாராம் அருண் விஜய், நடிப்பிலும் அசுர வேகம் காட்டியிருக்கிறாராம். பார்க்க டெரர் லுக்கில் இருந்தாலும், பழக மிகவும் இனிமையானவர் என பெயர் எடுத்தவர். 

இதையும் படிங்க: மோடியை போல காட்டுக்குள் செல்லும் ரஜினி... "மேன் வெர்சஸ் வைல்டு" நிகழ்ச்சியில் பங்கேற்பு..!

நடிகர் அருண் விஜய் நீண்ட காலமாகவே ருத்ரா என்ற நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார்.  பார்க்க படுபயங்கரமாக ஆள் உயரத்திற்கு இருக்கும் அந்த நாயை, அருண் விஜய் கொஞ்சிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள், சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

தனது செல்ல பிராணியான ருத்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்க்கும் போதே, அல்லு தெறிக்கிறது. அதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ஆமா! ருத்ராவுக்கு ஹாப்பி பர்த்டே சொல்லுறீங்க, வனிதாவுக்கு சொல்லக்கூடாதா என ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.