தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் அர்ஜுன். வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல என்கிற வசனம் யாருக்கு பொருந்துமோ... பொருந்தாதோ இவருக்கு கச்சிதமாக பொருந்தும். 

50 வயதை கடந்தும் இளம் ஹீரோ போலவே திரைப்படங்களில் தோன்றுகிறார். 

30 வருடங்களுக்கு மேலாக, தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் இவர் சமீபத்தில் மீடூ சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்தது தான். 

 நிபுணன் படத்தில் நடித்த போது தவறாக நடந்து கொண்டதாக கூறி அந்த படத்தின் நாயகி ஸ்ருதி ஹரிஹரன் குண்டை தூக்கி போட்டார். இந்த புகார் மீது வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையி கன்னட சினிமாவின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான அம்ரிஷ் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

 நெருங்கிய நண்பரான இவருக்கு நேரடியாக சென்று தன்னுடைய அஞ்சலியை செலுத்தினார் அர்ஜுன். மேலும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தும் நேற்று காலையிலேயே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் அஞ்சலி செலுத்தும்போது துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுத வீடியோ தற்போது  சமூகவலைதளங்களில் வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அந்த காட்சி இதோ: