கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இதனை பற்றி சிலர் கண்டு கொள்ளாமல்... வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனாவின் உண்மை முகம் தெரியாது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜுன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்றை வழியிட்டுள்ளார்.

இதில்  " இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இது புதிதான ஒரு வீடியோ கிடையாது. கொரோனா வைரஸ் பற்றிய வீடியோ தான்.

உங்கள் எல்லோருக்கும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்... தயவுசெய்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டின் உள்ளேயே இருங்கள்.   வெளியே வந்து விடாதீர்கள். இது உங்களை மற்றும் உங்கள் பெற்றோர் குடும்பத்தினரை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நேரம்.

 இதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நீங்கள் வீட்டில் உள்ளே இருந்தால் மட்டுமே அரசால் உதவி செய்ய முடியும். நமக்கு தெரிந்த வரை கொரோனா வைரஸ், தொட்டால், பாதிக்க பட்டவர் எச்சில் மேலே பட்டால் வரும் என்பது.

ஆனால் புதிதாக சில விஷயங்கள் தெரிய வந்துள்ளது. இந்த ஒரு வைரஸ் காற்றினால் கூட பரவும் என்றும், இது மிகவும் மோசமான விஷயம் என தெரிவித்துள்ளார். இதனால் நாம் வெளியில் போவதை தவிர்க்க வேண்டும் சில அத்தியாவசிய விஷயங்களுக்காக வெளியில் செல்லும்போது கூட முகமூடி அணிந்து செல்வது நல்லது என இந்த வீடியோவில் நடிகர் அர்ஜின் பேசியுள்ளார்.