மீரா தங்கம்.. உன் பியானோ உனக்காக காத்திருக்கு.. மகளின் மறைவு - கண்ணீருடன் ட்வீட் போட்ட பாத்திமா விஜய் ஆண்டனி!
Fatima Vijay Antony : பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுடைய 16 வயது மகள் மீரா விஜய் ஆண்டனி, கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு மரணித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது 48 வயது நிரம்பியுள்ள பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2006ம் ஆண்டு முதல் நடிகராகவும் தமிழ் திரையுலகில் வளம் வரும் அவர், இந்த 2023 மற்றும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுகளில் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
ஒரு பக்கம் இசை மறுபக்கம் நடிப்பு என்று பிஸியாக வளம் வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் பேரிடியாக வந்து விழுந்தது அவர் மகள் மீராவின் மரணம். கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அதிகாலை தனது அறைக்குள் மீரா அசைவின்றி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு விஜய் ஆண்டனி அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டது.
விஜய் ஆண்டனி உள்பட மொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கிய நிலையில் அதிலிருந்து மீண்டு தற்பொழுது தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த சூழலில் விஜய் ஆண்டனி அவர்களுடைய மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
அதில் "மீரா தங்கம், உனது பியானோ நீ தொடுவாய் என நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. நீ எங்களை விட்டு மிக விரைவாக சென்று விட்டாய். ஒருவேளை இந்த உலகம் உனக்கானது அல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் அம்மா இங்கு தான் இன்னும் இருக்கின்றேன், இறப்பிற்கும் வாழ்க்கைக்கு இடையிலான இந்த போராட்டத்தை குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. வாழ்க்கை எனக்கு இருள் சூழ்ந்து விட்டது, உன்னை சந்திக்கும் வரை நன்றாக உணவினை உண்டு மகிழ்ச்சியாக இரு நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று உருக்கமான பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.