பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.௦' திரைப்படத்தில், வில்லனாக நடித்து மிரட்டி இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவரை பற்றி வதந்தி ஒன்று கடந்த இரு தினங்களாக வட்டமிட்டு வரும் நிலையில், இது குறித்து அக்ஷய் குமார் விளக்கம் கொடுத்துள்ளது மட்டும் இன்றி, இதுபோன்ற வதந்தியை பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குததால் பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வரும், நடிகர் அக்ஷய் குமார், தனது சகோதரி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் மும்பையில் இருந்து, டெல்லி செல்வதற்காக அனைத்து விமான டிக்கெட்டுகளையும் முன் பதிவு செய்ததாக தகவல் வெளியானது.

3 பேர் செல்வதற்காக, அணைத்து டிக்கெட்டுகளை புக் செய்ததாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஒரு புறம் இருந்தாலும், அக்ஷய் குமாரின் இந்த செயலுக்கு பணமும் வசதியும் தான் காரணம் என்று சில நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள நடிகர் அக்ஷய் குமார், இது முழுக்க முழுக்க வதந்தி என தெரிவித்துள்ளார். தனது சகோதரி கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் தான் இருக்கின்றார் என்றும் அவர் டெல்லி உள்பட வேறு எங்கும் செல்லவில்லை என்றும் மேலும் அவருக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருப்பதாகவும் தனது சகோதரியும் 2 மகள்களும் டெல்லி செல்வதற்காக மொத்த விமான டிக்கெட்டையும் புக் செய்தததாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்றும் ட்விட் செய்துள்ளார். 

மேலும் இதுபோன்ற வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.