Ajithkumar : மணாலிக்கு சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு ஹெலிகாப்டரின் வலம் வந்தபோது எடுத்த வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏ.கே.61 திரைப்படம் தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்திற்காக பிரம்மாண்டமான வங்கி செட் அமைத்து ஐதராபாத்தில் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த விரைவில் பேங்காக் செல்ல உள்ளது. அங்கு மாஸான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அங்கு 35 நாட்கள் தங்கி படப்பிடிப்பை நடத்த உள்ளாராம் அஜித். 

இதையும் படியுங்கள்... அஜித்துடன் பைக் ட்ரிப்பில் இணைந்த பிரபல நடிகை..! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்..!

பேங்காக் செல்வதற்கு முன்னர் நடிகர் அஜித், தற்போது தனது நண்பர்களுடன் பைக் ரைடிங் சென்றுள்ளார். இதற்காக கடந்த மாத இறுதியில் சென்னையில் இருந்து லடாக் சென்ற அஜித் அங்கிருந்து பைக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த இரு வாரங்களாக அப்பகுதியில் பைக் ரைடிங் செய்து வருகிறார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் இந்த பைக் ட்ரிப்பில் இணைந்து சில நாட்கள் சுற்றினார்.

இந்நிலையில், தற்போது மணாலியில் தங்கியுள்ள நடிகர் அஜித், அங்கு சுற்றிப் பார்ப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது எடுத்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் நடிகர் அஜித்தின் நண்பர் சுப்ரஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... பைக் ரைடிங்கின் போது... புத்தர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து வழிபாடு செய்த அஜித் - வைரலாகும் வீடியோ