பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் விளையாடி வருபவர் தர்ஷன். இவர் பிரபல மாடலும், நடிகையுமான, சனம் ஷெட்டி என்பவரை காதலித்து வருகிறார். இதனை சனம் ஷெட்டியே பல முறை பேட்டிகளில் கூறியுள்ளார். அதே போல் தர்ஷனும் தனக்கு ஒரு காதலி இருக்கிறார் என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென நேற்றைய தினம், சனம் ஷெட்டி அழுது கொண்டே,  இனி தர்ஷன் தன் வாழ்க்கையில் இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, சனம் ஷெட்டியை காதலித்து, கருத்து வேறுபாடு காரணமாக, அம்புலி படத்தில் நடித்த அஜய் என்கிற நாயகன் கடந்த 2011 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவலும் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஹரி ஷங்கர், மற்றும் ஹரீஷ் நாராயணன் என இருவர் இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்புலி.  தமிழில் வெளிவரும் முழுமையான 3டி படம் இதுதான் என்கிற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. பழங்குடியின இளைஞன் கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். மேலும் அஜய், ஸ்ரீஜித் என்கிற இரண்டு கதாநாயகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

நடிகை சனம் ஷெட்டி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தின் நாயகன் அஜய் மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் நன்கு பழகி வந்தனர். ஆனால் சனம் ஷெட்டி நட்புடன் மட்டுமே அஜய்யிடம் பழகி வந்ததாக ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர் இருவரும் காதலித்து வந்ததாகவே கூறுகிறார்கள்.

இந்நிலையில், இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட, அஜய் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டார். பெங்களூரை சேர்ந்த அஜய் என்ஜினீயரிங் முடித்துவிட்டு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தால் நடிக்க வந்தவர். ஆனால் காதல் என்கிற உணர்வால் நடிப்பில் இருந்து அல்ல இந்த உலகில் இருந்தே காணாமல் போய் விட்டார். 

இவர் தற்கொலையால், அம்புலி திரைப்படத்தை எடுத்து முடிக்க மிகவும் சிரமப்பட்டு, ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்து இயக்கி முடித்தனர் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.