actor aari talking about her mother
அன்னையர் தினத்தன்று படப்பிடிப்பில் இருந்ததால் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத ஆரி.
தன்னுடைய அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள `இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் உணவு உண்டார்.
பின்னர் இயற்கை உரம் மூலம் காய்கறி உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கூறிய அவர்… நான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன். ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டு சென்று விட்டார்.
இளைஞர்களே தாய் தந்தையை 'அனாதையாக விட்டு விடாதீர்கள்' என்று கூறியபோது அவரது கண்கள் கலங்கி அழ ஆரமித்து விட்டார்.
பின் பேச தொடங்கிய அவர், அனைவரும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் 'உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து குளிர்பானங்களையும் தவிர்த்து, எதிர்த்து குரல் கொடுங்கள் என்று கூறினார்.
மேலும் இயற்கையாக கிடைக்கும் மோர், இளநீர், கரும்பு சாரு, நுங்கு, எலுமிச்சை பழ நீர், இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்துங்கள் நாகரீகம் என்ற பெயரில் விருந்தினர்களுக்கு நச்சு கலந்த குளிர் பானங்கள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். எல்லா உணவு வகைகளிலும் நச்சு பொருட்கள் கலந்து விட்டது ஏன்றும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய் கறிகளை நாமே உருவாக்க வேண்டும் என கூறினார்.
