முகுந்தனின் ஆட்டம் ஆரம்பம்.. முழு ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன் - "அமரன்" டீசர் இதோ!
Amaran Teaser : பிரபல இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் களமிறங்கியுள்ள சிவகார்த்திகேயனின் அமரன் பட டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஒரு ராணுவ வீரராக களம் இறங்கியுள்ள "அமரன்" திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் மிக மிகப் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் திரைப்படம் தான் "அமரன்".
இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் பெயரும், டீசரும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், அவருடைய பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது .
படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் அனைத்து அனல்பறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள ஒரு இந்திய ராணுவ டீம் சந்திக்கும் ஆபத்துகளின் கோவையாக இந்த படம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் சிவகார்த்திகேயன் தனது திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றார் என்றே கூறலாம்.