அப்டேட் கேட்டு நச்சரித்த ரசிகர்களை, இன்று மாலை ஏதோ ஒரு அறிவிப்பை விடுவதாக காலையிலிருந்து காக்க வைத்து டிமிக்கி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா. 

மூன்றாவது முறையாக அட்லியுடன் கைக்கோர்த்துள்ள விஜய் படத்தை AGS  நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.   விஜயோடு நயன்தாரா, யோகிபாபு, விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.  கால்பந்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.  

வரும்  தீபாவளிக்கு சர வெடியாக வெளிவர இருக்கும் இந்த படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் நீண்ட நாட்களாக சமூக வலைதளங்களில் தயாரிப்பாளரிடம் கேட்டு நச்சரித்து வந்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின்  நச்சரிப்பு தாங்காமல் முடிவெடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா தளபதி63 பட முதல் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனிடையே, படத்தை பற்றிய அப்டேட்டில், படத்தின் பெயர் வெளியிடப்படுமா? அல்லது டீசர் வெளியிடப்படுமா என்று எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் அசத்தினர் ரசிகர்கள்.  பரபரப்பாக காத்திருக்கும் ரசிகர்களும்  வரும் 21 ஆம் தேத்திமாலை ஃபஸ்ட் லுக் போஸ்டர், 22 அதிகாலை 12 மணிக்கு 2 வது லுக் போஸ்டரும் வெளியிட உள்ளதற்காக அப்டேட் கொடுத்துள்ளார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் யக்கா இதுக்குதான் இந்த பில்டப்பா? அடப்போக்கா இப்படி ஏமாத்திட்டிங்களே என சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற நடிகரின் ரசிகர்களோ, இந்தியாலயே ஏன் இந்த உலகத்துலயே அப்டேட்க்கே அப்டேட் விடற ஒரே கோஷ்டி இந்த கோஷ்டிதான் என கலாய்த்து வருகின்றனர்.