access rithikasingn share option for anitha sucide

குத்து சண்டை வீராங்கனையும், நடிகையுமான ரித்திகா சிங், தமிழகத்தையே கலங்க வைத்துள்ள மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதில், படிப்பும் அதில் பெரும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்று உலகத்தில் மிகவும் புகழ்பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் தான் என தெரிவித்திருந்தார்.

இதற்கு நெட்டிசென்கள் பலர் நீங்கள், போட்ட கருத்திற்கும் அனிதாவிற்கும் சம்பந்தமே இல்லை என கூறி, அனிதா தற்கொலை செய்துக்கொண்ட காரணத்தை தெரிந்துகொண்டு பின்னர் பேசுங்கள் என கோபமாக கூறினர்.

இதற்கு ரித்திகா சிங் தெரிந்துக்கொண்டு தான் பேசுகிறேன் என கூறி மொக்கை வாங்கியதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டு நைசாக ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.